தமிழ்

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமம் அது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகம்எலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர்!
சேமம் உற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழ் உடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள்
சொல்வதில் ஓர் மகிமை இல்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்து இருக்கும் குருடர் எல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவைகண்டார்
இங்கு அமரர் சிறப்புக் கண்டார்.

– மகாகவி சுப்ரமணிய பாரதியார்

Advertisements
This entry was posted in Bharathiar, Classics, Kids, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to தமிழ்

  1. மீனாட்சி நாச்சியார் சொல்கிறார்:

    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர்!

    This truth is still remaining same. As well as shame..

  2. Pingback: In conversation with Chezhiyan | The World of Apu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s